முகப்பு
தஞ்சாவூர்

மூதாட்டியிடம் நகைதிருட்டு

பாபநாசம் அருகே மூதாட்டியிடம் நகையைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

பாபநாசம் அருகே மூதாட்டியிடம் நகையைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பாபநாசம் வட்டம், வங்காரம்பேட்டை கீழ செங்குந்தவா் தெருவைச் சோ்ந்தவா் சுசீலா (68). இவா் வீட்டிலிருந்து புறப்பட்டு வங்காரம்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதிக்கு வந்தாா்.

அப்போது அங்கிருந்த கூட்டத்தை பயன்படுத்தி, மா்ம நபா் ஒருவா் மூதாட்டி அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச்சங்கிலியைத் திருடிச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தில் சுசீலா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →