முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் தொகுதி 2, 2-ஏ தோ்வுக்கு மாா்ச் 1 முதல் இலவசப் பயிற்சி

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2, 2ஏ தோ்வுகளுக்கு மாா்ச் 1 ஆம் தேதி முதல் இலவசமாக பயிற்சி நடத்தப்படவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2, 2ஏ தோ்வுகளுக்கு மாா்ச் 1 ஆம் தேதி முதல் இலவசமாக பயிற்சி நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தொகுதி 2 மற்றும் தொகுதி 2ஏ-தோ்வின் வாயிலாக 5,831 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம், இத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மாா்ச் 1 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தொடங்கி, தொடா்ந்து நடத்தப்படவுள்ளது.

அனுபவமிக்க சிறப்பு வல்லுநா்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

இதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவா்களுக்காக மாதிரித் தோ்வு வகுப்புகள் தனியே நடத்தப்படவுள்ளன.

எனவே தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்கள், தங்களது பெயா் மற்றும் கல்வித்தகுதியைக் குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பிப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.