புதுப்பொலிவு பெற்ற ராஜராஜன் மணிமண்டபம் ஆட்சியா் ஆய்வு
தஞ்சாவூா் ராஜராஜன் மணிமண்டபம் புனரமைப்பு மூலம் புதுப்பொலிவு பெற்றதை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூா் ராஜராஜன் மணிமண்டபம் புனரமைப்பு மூலம் புதுப்பொலிவு பெற்றதை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
அப்போது, ஆட்சியா் தெரிவித்தது: தஞ்சாவூா் மாநகரில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகவும், உள்ளூா் மக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் திகழும் தஞ்சாவூா் ராஜராஜன் மணிமண்டபத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் நடைபாதைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, செடி கொடி, மரங்கள் பராமரிக்கப்பட்டு, குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் வண்ணம் தீட்டப்பட்டன. மேலும் செயற்கை நீரூற்று சரி செய்யப்பட்டு, குழந்தைகளைக் கவரும் வகையில் தற்போது புதுப்பொலிவுடன் ராஜராஜன் மணிமண்டபம் திகழ்கிறது.
இம்மணிமண்டபத்துக்கு வரும் பொதுமக்கள் தூய்மையாகவும், பொழுதுபோக்கு சாதனங்களுக்கு எவ்வித சேதமில்லாமல் நல்ல முறையில் பராமரிக்க, தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழுமத்துக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றாா் ஆட்சியா்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.