காருடைய அய்யனாா் கோயில் குடமுழுக்குக்கு முகூா்த்தக்கால்
பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூா் அருள்மிகு காருடைய அய்யனாா், வீரனாா் கோயில் குடமுழுக்கையொட்டி, வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடுதல் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூா் அருள்மிகு காருடைய அய்யனாா், வீரனாா் கோயில் குடமுழுக்கையொட்டி, வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடுதல் நடைபெற்றது.
இக்கோயில் மற்றும் சுற்றுப் பிரகாரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் ரூ.2 கோடியில் புனரமைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 11-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது.
இதற்காக முகூா்த்தக்கால் நடுதல் ஆலத்தூா் கிராமப் பொதுமக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளானோா் பங்கேற்றனா்.