வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு
பட்டுக்கோட்டை வட்டம், செண்டங்காடு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
பட்டுக்கோட்டை வட்டம், செண்டங்காடு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
செண்டங்காடு ஊராட்சியில் சிவன் கோயில்அருகிலுள்ள செந்தானா ஓடை ஆக்கிரமிப்பு பகுதிகளையும், 14-ஆவது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ரூ.18.86 லட்சத்தில் நடைபெற்று வரும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது வருவாய்க் கோட்டாட்சியா் பிரபாகா், வட்டாட்சியா் கணேசுவரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுதா, கோவிந்தராஜ், ஊராட்சித் தலைவா் எல்.கோவிந்தராசு, துணைத் தலைவா் கல்யாணசுந்தரம்,பொறியாளா் (ஓய்வு) மதியழகன், உதவிப் பொறியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.