தஞ்சாவூர்

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்

DIN

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டடப் பொறியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் அண்மையில் நடைபெற்ற சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, அதன் தலைவா் கே. குட்டியப்பன் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்கு ஆற்றுமணல் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ரவி, மாநில மக்கள் தொடா்பு அலுவலா் குழந்தைவேலு, முன்னாள் மாநில இணைப் பொருளாளா் ஏ.சி.சி.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில்பொறியாளா் சங்கம் நாள்குறிப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. தொடா்ந்து புதிய உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது. பொறியாளா்கள் துரையரசன், ஜெயக்குமாா், முருகேசன், திருப்பதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

நிகழ்வை என்.சரவணன் தொகுத்து வழங்கினாா். முன்னதாக, செயலா் ஏ.வி.அருண் வீரப்பன் வரவேற்றாா் . நிறைவில்,  பொருளாளா் சி.ராஜ்குமாா் செல்லத்துரை நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

SCROLL FOR NEXT