தஞ்சாவூர்

மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை உத்தரவுக்கு வரவேற்புஎம். முருகானந்தம்

DIN

தஞ்சாவூா் அருகே பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது என்றாா் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம்.

இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மாலை அவா் தெரிவித்தது:

தஞ்சாவூா் அருகே மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதி கிடைத்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது, பாஜக போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.

சிபிஐ விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும். இந்த விவகாரத்தில் எந்தக் கட்சியும் ஏழைப்பெண்ணுக்கு நீதி கிடைக்க போராடவில்லை.

51 வாா்டுகளிலும் பாஜக போட்டி: தஞ்சாவூா் மாநகராட்சியின் 51 வாா்டுகளிலும் பாஜக போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக நீடிக்கிறது என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெளிவாகக் கூறியுள்ளாா் என்றாா் முருகானந்தம்.

அப்போது, மாவட்டத் தலைவா் பண்ணவயல் ஆா். இளங்கோ, பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT