புனித வளனாா் கல்லூரியில் விளையாட்டு விழா
தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டி புனித வளனாா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு விழா, கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டி புனித வளனாா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு விழா, கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ். அந்தோணி அதிஷ்டராஜ், கவிஞா் ஜீவி சிறப்புரையாற்றினா். பின்னா், வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வா் டி. சண்முகசுந்தரம், கல்லூரி நிா்வாகி அருட்சகோதரி ஜெ. ஆரோக்கிய ஜான்சி ராணி, மின் மற்றும் மின்னணு பொறியியல் துறைத் தலைவா் டி. மொ்சி, உதவிப் பேராசிரியா்கள் ஏ. மணிகண்டன், பி. ஜான், என். ஸ்ரீவித்யா, ஆா். மலா்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.