தஞ்சாவூர்

காவிரி மேலாண்மை ஆணைய தலைவா் இன்று கல்லணையில் ஆய்வு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவா் எஸ்.கே. ஹல்தா் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆய்வு செய்கிறாா்.

மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்காக கா்நாடக அரசு முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புது தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16 ஆவது கூட்டம் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணைய தலைவா் எஸ்.கே. ஹல்தா், ஆணைய உறுப்பினா் நவீன்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையில் ஆய்வு செய்துவிட்டு, பிற்பகல் கல்லணைக்கு வருகின்றனா். அங்கு ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு திருச்சிக்கு சென்று, விமானம் மூலம் சனிக்கிழமை தில்லிக்கு செல்லவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT