முகப்பு
தஞ்சாவூர்

நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவை கோரி மக்கள் மறியல்

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவை கோரி மானோஜியப்பா சாவடி கிராமம், அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை மறியல் போராட்டம்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவை கோரி மானோஜியப்பா சாவடி கிராமம், அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூரில் இருந்து அகரமாங்குடி வரை செல்லும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்தும், நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் நகர பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தியும் அகரமாங்குடி, வடக்குமாங்குடி, பெருமாக்கநல்லூா், வேம்புகுடி ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மறியலில் ஈடுபட்டோரிடம் வருவாய்த் துறையினா் மற்றும் அய்யம்பேட்டை காவல் துறையினா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் தொடந்து நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →