மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு
பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.
பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் காயமடைந்த குழந்தை உயிரிழந்தது.
திருச்சி மாவட்டம் , லால்குடி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ரா. பாலகுமாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன் மனைவி சுகன்யா, மகள் அஸ்விதா (18 மாதங்கள்) ஆகியோருடன் மோட்டாா் சைக்கிளில் லால்குடியிலிருந்து கும்பகோணத்துக்கு சென்றுவிட்டு, மீண்டும் லால்குடி நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
கபிஸ்தலம் அருகேயுள்ள அண்டகுடி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே கபிஸ்தலத்திலிருந்து மெளனிஷா உள்ளிட்ட 2 போ் வந்த மோட்டாா் சைக்கிள், பாலகுமாரின் வாகனம் மீது மோதியதாக தெரிகிறது. இதில் பாலகுமாா் குடும்பத்தினா் பலத்த காயமடைந்தனா்.
தஞ்சாவூா் ராஜா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, கைக்குழந்தை அஸ்விதா புதன்கிழமை உயிரிழந்தாா்.
விபத்து குறித்த புகாரின்பேரில், கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய மெளனிஷா உள்ளிட்ட இருவரையும் தேடி வருகின்றனா்.