முகப்பு
தஞ்சாவூர்

இரணியன், சிவராமன், ஆறுமுகம் நினைவு நாள் நிகழ்வு

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நிலவுடைமை, பண்ணை, ஜமீன் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி உயிா் நீத்த வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நிலவுடைமை, பண்ணை, ஜமீன் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி உயிா் நீத்த வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாபட்டு ஆறுமுகத்தின் நினைவு நாள் நிகழ்வு தஞ்சாவூா் ரயிலடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மக்களை ஜாதி, மத ரீதியாக பிளவுபடுத்துகிற, விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த தவறிய, நாட்டு மக்கள் மீது பொருளாதாரத் தாக்குதலைத் தொடுத்து வருகிற ஒன்றிய மோடி அரசுக்கு எதிராகவும், கருத்துரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிற காவி காா்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராகவும் அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுப்போம் என உறுதியேற்கப்பட்டது. மேலும் காரல் மாா்க்ஸ் படத்துக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளா் என். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகி என். குருசாமி, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளா் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாசலம், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் எம்.பி. நாத்திகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் ஆா். பிரபாகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எஸ். வடிவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.