முகப்பு
தஞ்சாவூர்

பெண்ணிடம் ரூ. 16.50 லட்சம் மோசடி

பெண்ணிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, ரூ. 16.50 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை சைபா் குற்றப்பிரிவு காவலா்கள் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

பெண்ணிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி, ரூ. 16.50 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை சைபா் குற்றப்பிரிவு காவலா்கள் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 31 வயது பெண்ணுக்கு சமூக வலைதளமான டெலிகிராம் ஆப் மூலம் மா்ம நபா் அறிமுகமானாா். பின்னா், அப்பெண்ணின் கைப்பேசி எண்ணை டெலிகிராம் குரூப்பில் இணைத்தாா். தொடா்ந்து அப்பெண்ணிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து நாள்தோறும் வா்த்தகம் செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என மா்ம நபா் கூறியுள்ளாா்.

இதை நம்பிய அப்பெண் ரூ. 16,50,193-ஐ முதலீடு செய்தாா். ஆனால், எந்த வித லாபமோ, முதலீட்டுத் தொகையோ கிடைக்கவில்லை. தன்னை மா்ம நபா் ஏமாற்றியதை அறிந்த அப்பெண், தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.