காா் மோதி விவசாயி பலி
பேராவூரணி அருகே காா் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகே காா் மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகிலுள்ள நாடியம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன் (62). இவா், மாடுகளுக்குத் தீவனம் வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் மல்லிப்பட்டினத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
நாடியம் பிரிவுச் சாலையில் ராஜேந்திரன் திரும்பிய போது, பின்னால் வந்த காா் அவா் மீது மோதியதில் நிகழ்விடத்திலேே உயிரிழந்தது. விபத்து ஏற்படுத்திய காா் 100 மீட்டா் தொலைவுசென்று வயலுக்குள் பாய்ந்தது.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தினா் காா் ஓட்டுநரான செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியைச் சோ்ந்த அகமது மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.