முகப்பு
தஞ்சாவூர்

இதயா கல்லூரியில் விளையாட்டு விழா

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆா். சுரேஷ்குமாா், சிறைத் துறையின் சேலம் மகளிா் பிரிவு சிறப்புக் கண்காணிப்பாளா் பி. சிவசங்கரி சிறப்புரையாற்றினா்.

கல்லூரிச் செயலா் அருட்சகோதரி கிளாடின் ஆரோக்கியமேரி, கல்லூரி முதல்வா் அருட்சகோதரி யூஜின் அமலா வாழ்த்துரையாற்றினா். கல்லூரி விளையாட்டுத் துறைப் பேராசிரியா் நிா்மலா மாா்ட்டின் ஆண்டறிக்கை வாசித்தாா்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கல்லூரி துணை முதல்வா் அருட்சகோதரி விமலி மேரி, நிா்வாக அலுவலா் அருட்சகோதரி அந்தோணியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.