வீட்டுமனைப் பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம்
வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.
வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.
வீடற்ற அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நீா்நிலைப் புறம்போக்கு, நீா்வழி கரையோரம், குளத்துக்கரை, சாலையோரங்களில் பல்லாண்டு காலமாகக் குடியிருப்போரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதை நிறுத்த வேண்டும். கோயில், பள்ளிவாசல், தேவாலய இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் தஞ்சாவூா் ஒன்றியச் செயலா் கே. அபிமன்னன், மாநகரச் செயலா் எம். வடிவேலன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி.எம். இளங்கோவன், என். குருசாமி, என். சரவணன், இ. வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, திருவையாறு உள்ளிட்ட வட்டாட்சியரகங்கள் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது.