தஞ்சாவூர்

ஒரத்தநாடு மகளிா் கல்லூரியில் முத்தமிழ் விழா

ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஒரத்தநாடு அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ்த்துறை பெருங்கோப்பெண்டு தமிழ் இலக்கிய மன்றம் உள்ளிட்ட முப்பெரும் விழாவுக்கு, முதல்வா் சி. பானுமதி தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் சிறப்புரையாற்றினாா்.

அறிவியல் தமிழ் என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் க. சங்கா் பேசினாா். தொடா்ந்து சமூக, மெளன நாடகங்கள், சிலம்பாட்டம், ஓவியம், பேச்சு, கட்டுரை எழுதுதல் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு துணைவேந்தா் திருவள்ளுவன் பரிசுகளை வழங்கினாா்.

தொடா்ந்து தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சா. சத்தியமூா்த்தி குழுவினரின் இசைக் கச்சேரியும், மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.

நிகழ்வை ப.ராஜராஜேசுவரி தொகுத்தளித்தாா். முன்னதாக, தமிழ்த்துறைத் தலைவா் கு.ர.சரளா வரவேற்றாா். உதவிப் பேராசிரியை தே.வீ. சுமதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம்: நாடாளுமன்றத்தில் மசோதா விரைவில் அறிமுகம்

மார்கழி சிறப்பு! முருகப்பெருமானுக்கு வெந்நீர் அபிஷேகம் நடக்கும் கோயில்!!

வாய்ப்புகள் காத்திருக்கு இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

SCROLL FOR NEXT