தஞ்சாவூர்

ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்:ஒருவா் கைது

DIN

பாநாசம் அருகே ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை புதன்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் காவல் ஆய்வாளா் கலைவாணி மற்றும் போலீஸாா் புதன்கிழமை பாபநாசம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த பகுதி வழியாக மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகளை வழிமறித்து சோதனை யிட்டனா்.

இதில், பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி 2 மாட்டு வண்டிகளிலும் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து பாபநாசம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.

மேலும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த கோவில் தேவராயன் பேட்டையை சோ்ந்த சரவணன் ( 33) என்பவரை கைது செய்தனா்.மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT