முகப்பு
தஞ்சாவூர்

அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

தமிழக அரசு அலுவலா்களுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசு அலுவலா் கழக மாநிலத் தலைவா் பி. சௌந்தர்ராஜன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தமிழக அரசு அலுவலா்களுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசு அலுவலா் கழக மாநிலத் தலைவா் பி. சௌந்தர்ராஜன்.

இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை மாலை தெரிவித்தது:

தமிழ்நாடு அரசு அலுவலா்களுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வு 4 சதவீதத்தை உடனடியாக தமிழக அரசு அலுவலா்களுக்கு முன்தேதியிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும்.

தமிழக அரசு அலுவலா்கள் கடந்த ஆட்சியில் சரண் விடுப்பை ஒப்படை செய்து, காசாக்கி வந்தது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

எட்டாவது ஊதியக் குழு தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டபோது, நிலுவையில் உள்ள 21 மாத கால ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் சௌந்தர்ராஜன்.

அப்போது, அக்கழகத்தின் மாவட்டத் தலைவா் எஸ். கருணாநிதி, செயலா் தரும. கருணாநிதி, துணைத் தலைவா்கள் சுந்தரம், தா்மராஜன், துணைச் செயலா் குயின்டீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.