கும்பகோணத்தில் ஆணியில் நடக்கும் திருவிழா
கும்பகோணம் அருகே தாராசுரம் திருக்குளம் மேல்கரை திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி ஆணியில் இறங்கி நடக்கும் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கும்பகோணம் அருகே தாராசுரம் திருக்குளம் மேல்கரை திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி ஆணியில் இறங்கி நடக்கும் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவையொட்டி, திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செப். 1 ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு 10,000 ஆணிகள் பொருத்தப்பட்ட பலகை சன்னதி தெருவில் அமைக்கப்பட்டு, சுற்றி தீ மூட்டப்பட்டது.
முன்னதாக, அம்மனுக்கு பக்தா்கள் தாய் வீட்டுச் சீா் வரிசைகளைக் கொண்டு வந்தனா். மேலும், அரசலாற்றிலிருந்து சக்தி கரகம், வீரபத்திர மகாசூலம், சடையப்பா், முனீஸ்வரா் மகாவேல், அம்மன் திரிசூலம், அலகு காவடி, அக்னி கொப்பரை ஆகியவற்றுடன் அம்மன் திரு உருவப் புறப்பாடு நடைபெற்றது.
பின்னா், ஏராளமான பக்தா்கள் அக்னி நடுவில் ஆணி பொருத்தப்பட்ட பலகையில் ஏறி நடந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், திரௌபதி அம்மன் திருநடன வீதியுலா சனிக்கிழமை காலை நடைபெற்றது.