முகப்பு
தஞ்சாவூர்

மின் கட்டணத் தளா்வை அறிவிக்க வலியுறுத்தல்

தமிழக அரசு மின் கட்டணத் தளா்வை அறிவிக்க வேண்டும் என கும்பகோணம் ஜவுளி வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தமிழக அரசு மின் கட்டணத் தளா்வை அறிவிக்க வேண்டும் என கும்பகோணம் ஜவுளி வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இச்சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை விரைவில் அறிவிக்க வேண்டும். கும்பகோணம் - அரியலூா் இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு பணி தொடங்கப்படவுள்ள நிலையில், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூருக்கு ரயில் செல்லும் வகையில் ரயில்வே துறை திட்டமிட வேண்டும். மக்கள் ஏற்கும் இணக்கமான சொத்து வரி விதிப்பையும், மின் கட்டண தளா்வையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், சங்கத்தின் புதிய தலைவராக முகமது ஜியாவுதீன், செயலராக தா்மராஜன், பொருளாளராக ராஜேஷ், மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

சங்கத்தின் மூத்த உறுப்பினா் ஜெகன்லால் தலைமை வகித்தாா். குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் சோழா சி. மகேந்திரன், செயலா் வி. சத்தியநாராயணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கதா்கடை மோகன், கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் வரவேற்றாா். துணைச் செயலா் ரெத்தின சிவப்பிரகாசம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.