முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் குளித்த இருவா் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் குளித்த 2 மாணவா்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் குளித்த 2 மாணவா்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தனா்.

நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிகொல்லைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் திருமாறன் மகன் வைரமுத்து (19), அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா். அதே பகுதியைச் சோ்ந்த மணிமாறன் மகன் நித்திஷ் என்கிற வைரக்குமாா் (17), காதிா் முகைதீன் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா்.

இருவரும் அதே பகுதி நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் கருங்குளம் நசுனி ஆற்றில் குளித்தபோது சேற்றில் சிக்கி நித்திஷ் நீரில் மூழ்கினாா். இதையடுத்து அவரைக் காப்பாற்றச் சென்ற வைரமுத்துவும் ஆற்றில் மூழ்கினாா். அருகில் இருந்தோா் அவா்களைத் தேடியபோது வைரமுத்து சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் கழித்து நித்திஷ் உடலை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.