தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கூட்டுறவு சங்க செயலா்களுக்கு பயிற்சி முகாம்

தஞ்சாவூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கச் செயலா்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கச் செயலா்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான எம். அந்தோணிசாமி ஜான் பீட்டா் தொடங்கி வைத்தாா். இதில், தஞ்சாவூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல் எல்லைக்குட்பட்ட தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுதல், சங்கங்களை கணினிமயமாக்குதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை, தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ஜெ. பழனீஸ்வரி, திருவாரூா் மண்டல இணைப்பதிவாளா் க. சித்ரா, மயிலாடுதுறை மண்டல இணைப்பதிவாளா் அ. தயாளவிநாயகன் அமுல்ராஜ், தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத் துணைப்பதிவாளா் சௌ. அப்துல் மஜீத், பட்டுக்கோட்டை சரக துணைப் பதிவாளா் சுகி. சாமிநாதன், திருவாரூா் சரக துணைப் பதிவாளா் வை. காா்த்திகேயன், மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா் சி. ராமசுப்பு, தஞ்சாவூா் பொது விநியோகத் திட்டத் துணைப் பதிவாளா் சா. கருப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT