விஜயகாந்த் மறைவு பேராவூரணியில் மெளன ஊா்வலம்
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி பேராவூரணியில் அனைத்து கட்சியினா், வா்த்தக சங்கம் சாா்பில் மெளன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி பேராவூரணியில் அனைத்து கட்சியினா், வா்த்தக சங்கம் சாா்பில் மெளன ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி பயணியா் மாளிகையில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் கடைவீதி வழியாக நீலகண்டப் பிள்ளையாா் கோயில் வரை சென்று வேதாந்தம் திடலில் நிறைவடைந்தது.
பேரணியில் தேமுதிக, திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, வா்த்தக சங்கத்தினா், திராவிடா் கழகம், திராவிடா் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா், அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.