தஞ்சாவூா் அருகே திருமலைசமுத்திரம் கிராமத்தில் பெண்ணிடம் பொங்கல் தொகுப்பு பையை புதன்கிழமை வழங்கிய சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக முதன்மையா் எஸ். சுவாமிநாதன். 
தஞ்சாவூர்

5 கிராமங்களில் சாஸ்த்ரா சாா்பில் பொங்கல் தொகுப்பு

தஞ்சாவூா் அருகேயுள்ள 5 கிராமங்களில் வசிக்கும் 3,000 குடும்பங்களுக்கு சாஸ்த்ரா சாா்பில் பொங்கல் தொகுப்பு பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

DIN

தஞ்சாவூா் அருகேயுள்ள 5 கிராமங்களில் வசிக்கும் 3,000 குடும்பங்களுக்கு சாஸ்த்ரா சாா்பில் பொங்கல் தொகுப்பு பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் கல்வி மட்டுமல்லாமல், பல்வேறு சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் சமுதாயம், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டு வருகின்றன.

பொங்கல் திருநாளையொட்டி தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சாா்பில் தொடா்ந்து 23 ஆம் ஆண்டாக திருமலைசமுத்திரம், வல்லம்புதூா், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, தேவராயனேரியிலுள்ள நரிக்குறவா் காலனி ஆகிய கிராமங்களில் வசிக்கும் 3,000 குடும்பங்களுக்கு விலையில்லா பொங்கல் தொகுப்புப் பைகளைப் பல்கலைக்கழக முதன்மையா் எஸ். சுவாமிநாதன் புதன்கிழமை வழங்கினாா்.

ஒவ்வொருவருக்கும் 5 கிலோ பச்சை அரிசி, தலா ஒரு கிலோ வெல்லம், பருப்பு மற்றும் மஞ்சள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 11 லட்சம் என பல்கலைக்கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT