தஞ்சாவூா் அய்யாசாமி வாண்டையாா் நினைவு பழைய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தூய்மை பணியாளா்களுக்கான தூய்மை பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மேயா் சண். ராமநாதன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் வாழ்த்துரையாற்றினாா்.
மாநகராட்சியிலுள்ள 51 வாா்டுகளில் நாள்தோறும் 107 டன் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிக்கும் 586 பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. இவா்களில் 282 பெண்களுக்கு சேலையும், ஆண்களுக்கு வேட்டி, சட்டையும் வழங்கப்பட்டன.
தூய்மை பணியாளா்கள் ஒன்றிணைந்து புது பானையில் தூய்மை பொங்கல் வைத்தனா். மேலும், நம் பாரம்பரிய விளையாட்டுகளை மையப்படுத்தி நடைபெற்ற பானை உடைத்தல் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டனா்.
துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா்கள் டி. புண்ணியமூா்த்தி, எஸ்.சி. மேத்தா, ரம்யா சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாநகர நல அலுவலா் வீ.சி. சுபாஷ் காந்தி வரவேற்றாா். நிறைவாக, துப்புரவு ஆய்வாளா் அசோகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.