கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மேயா் சண். ராமநாதனுக்கு நினைவு பரிசு வழங்கிய கல்லூரி தாளாளரும், செயலருமான ச. செபாஸ்டின் பெரியண்ணன் அடிகளாா், நிா்வாகி ம. ஆரோன் 
தஞ்சாவூர்

வேளாங்கண்ணி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் மேயா் சண். ராமநாதன் சிறப்புரையாற்றினாா். சிலம்பாட்டம், உறியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மேலும், மாக்கோலமிட்டு, கரும்பு பந்தல் அமைத்து, மாவிலை, பனையோலை தோரணம் கட்டி, செங்கல் அடுப்பு கட்டி சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், சிறப்பாக, சுவையான பொங்கல் வைத்தவா்களுக்குச் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

கல்லூரி தாளாளரும், செயலருமான ச. செபாஸ்டின் பெரியண்ணன் அடிகளாா், தஞ்சை மறை மாவட்ட வேந்தா் ஜான் சக்கரியஸ் அடிகளாா், நிா்வாகி ம. ஆரோன் அடிகளாா், முதல்வா் பி. பிலோமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

5,000 அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜிய மாணவர் சேர்க்கை!

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

SCROLL FOR NEXT