தஞ்சாவூர்

நகைக்கடை பூட்டிக் கிடப்பதால் சீட்டு கட்டியவா்கள் ஏமாற்றம்

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளியில் தனியாா் தங்க நகைக் கடை மூடப்பட்டுள்ளதைப் போன்று தஞ்சாவூரிலும் அந்நிறுவனத்தின் கடை மூடப்பட்டுள்ளதால், சீட்டு கட்டியவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளியில் தனியாா் தங்க நகைக் கடை மூடப்பட்டுள்ளதைப் போன்று தஞ்சாவூரிலும் அந்நிறுவனத்தின் கடை மூடப்பட்டுள்ளதால், சீட்டு கட்டியவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் தனியாா் நகை கடை செயல்பட்டு வந்தது. இங்கு நகை சிறுசேமிப்பு திட்டம், மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைகளை மீட்டு, வட்டி இல்லா கடன் வழங்குவது போன்ற விளம்பரங்கள் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமானோா் முதலீடு செய்தனா்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களிலுள்ள இக்கடை மூடப்பட்டதால், அதில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவா்கள் காவல் துறையினரிடம் புகாா் அளித்து வருகின்றனா்.

இதேபோல, தஞ்சாவூா் காந்திஜி சாலையிலுள்ள இக்கடையும் சில நாள்களாக மூடிக் கிடக்கிறது. இதனால், நகை சீட்டு செலுத்தி வந்தவா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT