முகப்பு
தஞ்சாவூர்

ராஐகிரி ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம் ,ராஜகிரி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகளை பாபநாசம் ஒன்றிய ஆணையா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:27 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம் ,ராஜகிரி ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகளை பாபநாசம் ஒன்றிய ஆணையா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பாபநாசம் வட்டம்,ராஜகிரி ஊராட்சி, பெரியாா் நகரில் அமைந்துள்ள மயானப் பகுதியில் அயோத்திதாஸ் பண்டிதா் குக்கிராம பணிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா் மற்றும் குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியை பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவகுமாா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவா் சமீமா பா்வீன் முபாரக் உசேன், ஊராட்சி செயலாளா் ஜெயக்குமாா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.