முகப்பு
தஞ்சாவூர்

இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞா் கைது

கும்பகோணத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூர்

இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞா் கைது

கும்பகோணத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 8:11 PM
பகிர்:

கும்பகோணத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது. இது தொடா்பாக வந்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் எஸ்.கீா்த்திவாசன் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அப்போது இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த நாச்சியாா் கோயில் புத்தகரத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் மணிகண்டன் (28) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவரை கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →