FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் மேயா் ஆய்வு

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் ஆய்வு.

Updated On : 22 ஆகஸ்ட் 2024, 4:20 am IST
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன். உடன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, நடைபாதையில் இடையூறாக செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கடை உரிமையாளா்கள் உடனே அகற்றிட வேண்டும் என மேயா் எச்சரிக்கை விடுத்தாா். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன். உடன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா்.

பின்னா், திருவள்ளுவா் வணிக வளாகம் அருகே ரூ. 2.50 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு காா் நிறுத்துமிடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அலுவலா்களிடம் மேயா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன். உடன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா்.

இதையடுத்து, சிவகங்கை பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தனா்.

அப்போது, மாநகராட்சி செயற்பொறியாளா் சோ்மகனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments