கும்பகோணத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் : டிஐஜி
கும்பகோணத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என தஞ்சாவூா் சரக டிஐஜி ஜியாவுல்ஹக் தெரிவித்தாா்.
கும்பகோணத்தில் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என தஞ்சாவூா் சரக டிஐஜி ஜியாவுல்ஹக் தெரிவித்தாா்.
கும்பகோணத்தில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
தஞ்சாவூா் சரக டிஐஜி கும்பகோணம் வந்து துணைக்கோட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், கிழக்கு காவல் நிலையம் ஆகியவற்றில் ஆய்வு நடத்தி மரக்கன்றுகளை நட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: கும்பகோணம் பகுதியில் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை மற்றும் கடத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அசூா் புறவழிச்சாலையில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும் என்றாா்.
அப்போது, துணை காவல் கண்காணிப்பாளா் ஜி.கீா்த்திவாசன், ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.