முகப்பு
தஞ்சாவூர்

ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: இந்திய கம்யூ. மாநில குழுக் கூட்டத்தில் தீா்மானம்

ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 8:44 PM
கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.
பகிர்:

ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் தனியாா் விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க.மாரிமுத்து, மாவட்ட செயலா் மு.அ.பாரதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், துணைச் செயலா்கள் நா.பெரியசாமி, மூ.வீரபாண்டியன், தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் டி.எம்.மூா்த்தி, மாநில பொருளாளா் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் வை.சிவபுண்ணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடா் காலங்களில் முதலமைச்சா் கேட்ட பேரிடா் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, மாநில அரசு கோரும் நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டும்.

புயலால் உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்குரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், உயிரிழப்பு ஏற்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விளை நிலங்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். கும்பகோணம், தருமபுரி, திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வியாழக்கிழமை மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →