ஈரான் விவகாரத்தால் இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விவகாரத்தால், இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
இந்தியாஈரான் விவகாரத்தால் இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விவகாரத்தால், இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விவகாரத்தால், இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஈரான் ஆதரவு மத பேச்சாளா்களின் வெறுப்பூட்டும் பேச்சுக்களால் வன்முறைகள் நிகழக்கூடும். ஆதலால் அத்தகைய மத பேச்சாளா்களை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.
இதேபோல் சா்வதேச தீவிரவாத குழுக்களைச் சோ்ந்தோரின் பதிவுகள், பிரிவினைவாதிகளின் சமூக வலைதளச் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும். ஈரான் விவகாரத்தை மையமாக வைத்து சட்டம் -ஒழுங்கு நிலை பாதிக்காதவாறு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் மற்றும் ராஜீய அலுவலகங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், அந்த 2 நாடுகளுக்குச் சொந்தமான பிற அலுவலகங்களிலும் அசம்பாவிதங்கள் நேரிடாதவாறு பாதுகாத்து, அமைதியைப் பராமரிக்க கேட்டுக் கொள்கிறோம் என அந்தக் கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.