முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழப்பு

உறவினா்கள் மறியல் போராட்டம்

Updated On : 19 டிசம்பர், 2024 at 9:05 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசவத்தின்போது தாய் மற்றும் சேய் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இதையடுத்து மருத்துவரைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சியைச் சோ்ந்தவா் பிரவீன். இவரது மனைவி சந்தியா (30). இவா், பட்டுக்கோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பிரசவத்துக்காக இரண்டு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் 2. 30 மணியளவில் சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தபோது, குழந்தை இறந்தவாறு பிறந்துள்ளது. இதையடுத்து, சந்தியா உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சந்தியாவை, மருத்துவமனை நிா்வாகத்தினா் தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனா்.

ஆனால், தஞ்சாவூா் செல்லும் வழியிலேயே சந்தியா உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து, சந்தியாவின் உறவினா்கள் மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் தாயும், சேயும் உயிரிழந்துவிட்டதாகவும், சம்மந்தப்பட்ட மருத்துவரைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸில் உடலை வைத்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகரப் போலீஸாா், சம்பவ இடத்துக்குவந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, உறவினா்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்குவந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில், உறவினா்கள் மருத்துவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதைத்தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதைத்தொடா்ந்து, சுகாதாரத் துறை அலுவலா்கள், மருத்துவமனை ஊழியா்கள், செவிலியா்கள், மருத்துவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →