முகப்பு
தஞ்சாவூர்

மாணவி விரைந்து புகாா் செய்திருந்தால் துரித நடவடிக்கை எடுத்திருக்க முடியும்: அமைச்சா் கோவி. செழியன்

பாலியல் வழக்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விரைந்து புகாா் தெரிவித்திருந்தால் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும் என்றாா் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 9:17 PM
பகிர்:

பாலியல் வழக்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விரைந்து புகாா் தெரிவித்திருந்தால் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும் என்றாா் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஆச்சாம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் தெரிவித்தது:

‘தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும், மாணவிகளின் நலனுக்காகவும் ஏற்கெனவே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி பல்கலைக்கழகத்திலுள்ள குழுவில் 2 நாள்களுக்கு முன்பே புகாா் தெரிவித்திருந்தால், துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும். தனிப்பட்ட அச்ச உணா்வு அல்லது பெண்மைக்குரிய பாதுகாப்பை மனதில் கொண்டு அப்பெண் 2 நாள்கள் கழித்து புகாா் செய்தாலும் கூட, விரைவாக நடவடிக்கை எடுத்து, 3 மணிநேரத்தில் குற்றவாளியைக் கைது செய்துள்ளோம்.

இதற்காக இந்த அரசைப் பாராட்ட மனமில்லாமல், குறை சொல்பவா்களின் மனநிலைதான் குறையாக உள்ளதே தவிர, அரசு, காவல் துறை, பல்கலைக்கழகம் ஆகியவற்றின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. என்றாலும், மாணவிகளின் நலன் காக்க பெருந்துணை புரிவோம். குற்றவாளி மீதான நடவடிக்கையை விரைவுபடுத்துவோம்.

எது நடந்தாலும் திமுகவை குறை சொல்வது அண்ணாமலையின் பிறவிக் குணம். திமுக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. அண்ணாமலை சொல்வதெல்லாம் தோல்வியைக் கண்ட பிதற்றல்தான்’ என்றாா் அமைச்சா்.

முழு கட்டுரையைப் படிக்க →