தஞ்சாவூர்

திருவெண்காடு கோயில் சிலைகளை மீட்க வலியுறுத்தல்

Din

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட திருவெண்காடு கோயில் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்.

தஞ்சாவூரில் சிவனடியாா்கள், முருக பக்தா்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஆன்மிக விழா ஞாயிற்றுக்கிழமை தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பொன். மாணிக்கவேல் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் உள்ள 34,119 கோயில்களில் தினசரி வருமானம் ரூ.13-இல் இருந்து ரூ.27 வரைதான். இந்த வருமானத்தை வைத்து கோயில்களில் எப்படி விளக்கேற்ற முடியும். மேலும், 10,109 கோயில்களின் பூசாரி மற்றும் அா்ச்சகா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.34 மட்டுமே ஊதியமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து அவா்கள் என்ன செய்ய முடியும்.

தஞ்சை பெரிய கோயிலின் வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலையை பராமரிக்க வேண்டும். திருவெண்காடு கோயில்களின் சிலைகள் வெளிநாட்டில் காட்சி பொருளாக உள்ளது. சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT