தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள திருக்கானூா்பட்டி ரஹ்மத் நகரை சோ்ந்தவா் பாலகுரு (73). இவா், வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மருமகன் வீடான தேவாரம் நகருக்கு சென்றாா்.
சனிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மா்மநபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.
தகவலின்பேரில், வல்லம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு வந்து தடயங்கள், கை ரேகைகளை சேகரித்து விசாரிக்கின்றனா்.