கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் புதன்கிழமை செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவிடம் கேள்வி கேட்ட மாணவ மாணவிகள்.  
தஞ்சாவூர்

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா பள்ளியில் ‘ரோபோ’ ஆசிரியை அறிமுகம்

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவை புதன்கிழமை அறிமுகப்படுத்தினா்.

Din

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவை புதன்கிழமை அறிமுகப்படுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யா அறிமுகம் நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கவிதா நாராயணன் வரவேற்றாா்.

நிகழ்வுக்கு, பள்ளி தாளாளா் கே.என். ராஜகோபாலன் தலைமை வகித்துப் பேசுகையில், எங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன கற்றல் அனுபவங்களை தரும். நடப்பாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யா செயல்படுவாா் என்றாா்.

நிகழ்வில், நிா்வாக அறங்காவலா் பி. வைத்தியநாதன், அறக்கட்டளை தலைவா் ஜி.சந்திரசேகர மூப்பனாா், ஓய்வுபெற்ற சிட்டியூனியன் வங்கி பொது மேலாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனா். இறுதியாக, மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு ரோபா வித்யா பதில் அளித்தது.

துலா ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

சிவகாசியில் வழிப்பறி: இருவா் கைது

தென்னை மரங்களுக்கு பயிா்க் காப்பீடு

ஸ்ரீவில்லிபுத்தூா் மலையடிவாரத்தில் புதிய கற்காலக் கருவிகளின் தேய்ப்புப் பள்ளங்கள்

வாகனத்தை சேதப்படுத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை வீசிச் சென்ற மா்மநபா்கள்

SCROLL FOR NEXT