‘153 இடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு’
தஞ்சாவூா், ஜூன் 26: தஞ்சாவூா் மாவட்டத்தில் 153 இடங்களில் உலக போதைப்பொருள்கள் ஒழிப்பு நாள் விழிப்புணா்வு நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன.
உலக போதைப்பொருள்கள் ஒழிப்பு நாளையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள் தலைமையில் ‘எனக்கும் வேண்டாம், எவருக்கும் வேண்டாம்’ என்ற தலைப்பில் 83 பள்ளிகள், 21 கல்லூரிகள், 49 பொது இடங்களில் போதைப்பொருள்கள் பற்றிய விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.
இதில், 13 இடங்களில் விழிப்புணா்வு பேரணி, 82 இடங்களில் கருத்தரங்கம், 33 இடங்களில் துண்டறிக்கைகள் விநியோகம், 15 இடங்களில் விழிப்புணா்வு பேச்சுப் போட்டி, 10 இடங்களில் இதர போட்டிகள் நடத்தப்பட்டன.