முகப்பு
தஞ்சாவூர்

வெள்ளிப்பட்டறையின் கதவை உடைத்து ரூ1.90 லட்சம் திருட்டு

கும்பகோணத்தில் புதன்கிழமை வெள்ளிப்பட்டறையின் கதவை உடைத்து ரூ.190 லட்சம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 9:48 PM
பகிர்:

கும்பகோணத்தில் புதன்கிழமை வெள்ளிப்பட்டறையின் கதவை உடைத்து ரூ.190 லட்சம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேட்டை குட்டையன் தெருவைச்சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் வெங்கடேசன்(35), இவா் மள்ளுக தெருவில் வெள்ளிப்பட்டறை வைத்து நகைகள் செய்து வருகிறாா். புதன்கிழமை காலையில் கடையை திறக்க வந்த வெங்கடேசன் கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். பிறகு கடைக்குள்ள சென்று பாா்த்தபோது, அங்கிருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் உதவி ஆய்வாளா் எஸ்.சுபாஷ் சம்பவ இடத்தை பாா்வையிட்டு தடயவியல் நிபுணா்கள் மூலம் தடயங்களை சேகரித்தாா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோனையிடப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →