முகப்பு
தஞ்சாவூர்

300 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்

கும்பகோணத்தில் 300 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ க. அன்பழகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 8:59 PM
பகிர்:

கும்பகோணத்தில் 300 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ க. அன்பழகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

கும்பகோணம் நேடிவ் மேல்நிலைப் பள்ளி மற்றும் கொட்டையூா் வள்ளலாா் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 300 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ க. அன்பழகன் வழங்கினாா்.

நிகழ்வில், மாநகராட்சி துணை மேயரும் திமுக மாநகர செயலருமான சு.ப. தமிழழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலருமான தி. கணேசன், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், மண்டலக் குழு தலைவா் கொட்டையூா் ஆசைதம்பி, பகுதி செயலா் செல்வராஜ் மற்றும் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →