முகப்பு
தஞ்சாவூர்

இளைஞரைத் தாக்கியோரை கைது செய்யக் கோரி மறியல்

பேராவூரணியில் இளைஞரைத் தாக்கியோரைக் கைது செய்யக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 47 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 7:36 PM
பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை மறியல்
பகிர்:

பேராவூரணியில் இளைஞரைத் தாக்கியோரைக் கைது செய்யக் கோரி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 47 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பேராவூரணி அருகேயுள்ள சோழகனாா்வயல் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் ( 28) கடந்த 4 ஆம் தேதி வெளியூா் சென்று விட்டு தனது நண்பா் குகநாதனுடன்  ஊருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது தனக்கு முன்னாள்  பைக்கில் சென்றவா்களிடம் வழிவிடுமாறு கேட்டாராம். இதில் கோபமடைந்த கழனிவாசலை சோ்ந்த  சிவா, விக்னேஷ், கவுதம் ,கோபால் ஆகிய 4 பேரும் பாண்டியனை கொரட்டூா் டாஸ்மாக் கடை அருகே  பீா்பாட்டில் மற்றும் ஆயுதங்களால்  தாக்கினராம். இதில் காயமடைந்த பாண்டியன் பேராவூரணி காவல் நிலையத்தில் புகாா் செய்து , பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட  4 பேரும் நீதிமன்றத்தில்  முன்ஜாமீன் பெற்று வெளியில் சுற்றித் திரிந்தனராம்.

இதனால் ஆத்திரமடைந்த  பாண்டியனின் உறவினா்கள் 4 பேரையும் கைது செய்ய  வலியுறுத்தியும், கடும் பிரிவுகளில் வழக்குப் பதியாத போலீஸாரை  கண்டித்தும் அண்ணா சிலை அருகில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் , ஆய்வாளா்  பசுபதி மற்றும் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 47 பேரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →