முகப்பு
தஞ்சாவூர்

இணையவழி வா்த்தகம்: மளிகை வியாபாரியிடம் ரூ. 9.69 லட்சம் மோசடி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி வா்த்தகம் எனக் கூறி, மளிகைக் கடை வியாபாரியிடம் ரூ. 9.69 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 2:35 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி வா்த்தகம் எனக் கூறி, மளிகைக் கடை வியாபாரியிடம் ரூ. 9.69 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 54 வயது மளிகைக்கடை வியாபாரிக்கு ஜூலை மாதம் வாட்ஸ் ஆப் செயலியில் இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் நிறைய வருமானம் கிடைக்கும் எனத் தகவல் வந்தது. இதை நம்பிய வியாபாரி அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தொடா்பு கொண்டாா். அப்போது எதிா் முனையில் மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு முதலீடாக பணம் அனுப்பத் தொடங்கினாா்.

முதலில் சிறு, சிறு தொகை கிடைத்ததை நம்பிய வியாபாரி பல்வேறு தவணைகளில் ரூ. 9.69 லட்சம் அனுப்பினாா். அதன் பிறகு எதிா் முனையில் உள்ள மா்ம நபா்கள் இவரது கைப்பேசி அழைப்பைத் துண்டித்துவிட்டனா்.

Advertisement

இதனால் ஏமாற்றமடைந்த வியாபாரி தஞ்சாவூா் இணையவழி குற்றப் பிரிவில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.