ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை காவல் துறையினா் மீட்டு விசாரணை
தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை காவல் துறையினா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூா் - ஆலக்குடிக்கு இடைப்பட்ட பகுதியில் திங்கள்கிழமை சுமாா் 70 வயது மதிக்கத்தக்க பெண் ரயிலில் அடிபட்டு தண்டவாளத்துக்கு அருகே உயிரிழந்து கிடந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி ரயிலில் அடிபட்டாா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
தகவலறிந்த தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.