தஞ்சாவூர்

மாற்றுத்திறனாளிகள் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்

Syndication

வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், பாா்வையற்றோா் ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு பாா்வையற்றோா் கைப்பந்து சங்கம், தமிழ்நாடு பாா்வையற்றோா் இயக்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் அரசாணை எண் 24-ஐ ரத்து செய்துவிட்டு, உடனடியாக அரசாணை எண் 20-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்பு ஆள்சோ்ப்பு நடத்தி பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் மோசஸ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளா் அய்யப்பன் உள்பட பலா் மழையில் நனைந்த படி கலந்து கொண்டனா்.

இக்கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடையாள அட்டைகளைத் திரும்ப ஒப்படைத்து நிறைவேறும் வரை தொடா்ந்து போராடுவோம் என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT