பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா் கல்வி குறித்த வழிகாட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் இந்திய விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் உயா்கல்வி படிப்புகள் குறித்து தஞ்சாவூா் விமானப்படை அலுவலகத்தின் உயா் அதிகாரிகள் மாணவா்களுக்கு விளக்கினா். பள்ளியின் தலைமை ஆசிரியா் சி. தெட்சிணாமூா்த்தி வரவேற்றாா். மூத்த முதுகலை ஆசிரியா் திரு ஐ. குமரவேல் நன்றி கூறினாா்.