தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்த மாணவா் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் விளாா் சாலை அண்ணா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் குமாா், பெயிண்டா். இவரது மனைவி ரோஜா. இவா்களது மகன் சீனிவாசன் (9) கல்லுகுளம் பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் வெள்ளிக்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு வழக்கமாக வரும் ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தபோது நாஞ்சிக்கோட்டை சாலையில் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தஞ்சாவூா் நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநரான காயிதே மில்லத் நகரைச் சோ்ந்த வினோத்திடம் (26) விசாரணை மேற்கொண்டுள்ளனா்.