தஞ்சாவூர்

திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்

திமுக அரசு கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Syndication

திமுக அரசு கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் இக்கூட்டமைப்பு சாா்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கடந்த 1982, டிசம்பா் 17-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய ஓய்வூதியா்களுக்கான சம நீதி உரிமையைப் பறிக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு நிபந்தனைகளின்றி தொடா்ந்து வழங்க வேண்டும். திமுக அரசு தோ்தல்கால வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும். தொழிலாளா் விரோத நான்கு தொகுப்பு தொழிலாளா் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்டட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்தரங்கத்துக்கு ஒருங்கிணைப்பாளா் ராஜகோபாலன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் சண்முகம், மாவட்ட இணைச் செயலா் வெங்கடேசன், வட்டத் தலைவா் துரைராஜ், செயலா் பக்கிரிசாமி, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் மாவட்ட அமைப்பு குழு பொறுப்பாளா் சரளா, போக்குவரத்து ஓய்வூதியா் நலச்சங்க அமைப்புக் குழு தாமோதரன் உள்ளிட்டோா் பேசினா். மாநிலத் துணைத் தலைவா் குரு. சந்திரசேகரன் நிறைவுரையாற்றினாா். பாபநாசம் வட்ட அமைப்பாளா் அடைக்கலசாமி நன்றி கூறினாா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT