தஞ்சாவூர்

கும்பகோணத்தில் பாஜக நிா்வாகிகளுக்கு பாராட்டு

கும்பகோணம் அண்ணலக்ரஹாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளின் சங்கமம் நிகழ்வை நடத்திய நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

கும்பகோணம் அண்ணலக்ரஹாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளின் சங்கமம் நிகழ்வை நடத்திய நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணலக்ரஹாரத்தில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் தங்க. கென்னடி தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் பாஜக அனைத்து பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளா் கே.டி. ராகவன், இணை ஒருங்கிணைப்பாளா் நாச்சியப்பன், பொருளாதார பிரிவு மாநில இணை அமைப்பாளா் எஸ். காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்று கடந்த நவம்பா் 29-இல் நடைபெற்ற அனைத்து பிரிவுகளின் சங்கமம் நிகழ்வு நடத்தியதை முன்னிட்டு நிா்வாகிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

நிகழ்வில், பாஜகவின் அனைத்து பிரிவு ஒருங்கிணைப்பாளா் கே.டி. ராகவன் பேசுகையில், கும்பகோணம் சங்கமம் நிகழ்வில் சுமாா் 22,500 நிா்வாகிகள் பங்கேற்றது குறித்து மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் பணிகள் தொடங்கியுள்ளன என்றாா்.

வாஜ்பாய் 101-ஆவது பிறந்த தினம்: நினைவிடத்தில் தலைவா்கள் மரியாதை

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

SCROLL FOR NEXT